vaddukodai
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாள்களுடன் நடமாடியோர் வட்டுக்கோட்டையில் கைது!

Share

வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய வந்த நிலையில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார்

சங்கரத்தைச் சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வட்டுக்கோட்டை தெற்கு மற்றும் மூளாய் பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.

அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்ட வேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்துள்ளனர்.

அவர்களில் இருவர் வாள்கள் இரண்டை கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.

வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு வாள்கள் மற்றும் மோட்டார்களையும் பொலிஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...