Duminda e1654006005405
அரசியல்இலங்கைசெய்திகள்

துமிந்தவைக் கைதுசெய்து சிறையில் அடைக்குக! – நீதிமன்றம் உத்தரவு

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலை வழக்கு தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றத்தால் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், துமிந்த சில்வாவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...