image 1488947718 9cc2fd6c8b
இலங்கைசெய்திகள்

யாழில் 5,000 கொடுப்பனவு!

Share

ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வருமானம் குறைந்த மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற தொகையை விட மேலதிகமான தொகையைச் சேர்த்து தலா 5,000 ரூபா வழங்குவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 78,442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும் 27 ஆயிரத்து 978 வறிய குடும்பங்களுமென மொத்தமாக 1,06,420 குடும்பங்கள் அந்த நன்மையைப் பெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் அந்த நிதி கிடைத்தவுடன் மே மற்றும் யூன் மாதங்களில் அந்த கொடுப்பனவு கிடைக்கும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....