2 1
இலங்கைசெய்திகள்

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்!

Share

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வேலைத்திட்டம்!

‘Nation Branding campaign’ என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க நேற்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐந்து பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில், Nation Branding campaign என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்தி 10 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...

கொத்மலை
இலங்கை

திறக்கப்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை...

mon
இலங்கை

5,000 மில்லியன் டொலர்களைக் கடந்த வெளிநாட்டு ஊழியர்களின் பணப்பரிமாற்றம்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த...