27 10
இலங்கைசெய்திகள்

சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவோம்: அநுர திட்டவட்டம்

Share

சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவோம்: அநுர திட்டவட்டம்

அரசாங்கம் மற்றும் சஜித்தின் முகாமில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள் பற்றிய உண்மைகளை சமூகத்திற்கு முன்வைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(16.09.2024) வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த தேர்தல் பிரசாரத்தில் எங்கள் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். வெற்றி பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களில் புதிதாக எதுவும் இல்லை. எங்களுடைய உண்மைகளை மீண்டும் மீண்டும் முன்வைக்கபடும்.

நம் நாட்டில் பல சமயங்களில் தேர்தல் பணிகள் இப்படியே நடந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

எனவே பொதுமக்கள் மத்தியில் ஊகங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரு சந்தர்ப்பங்களில் கலவரம் ஏற்படுவதற்கான அபாயம் பற்றி கூறியுள்ளார்.

அவ்வாறே ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் ஒரு சம்பவம் பதிவாகியிருப்பதைப் பார்த்தோம்.

எனவே, சதி செய்தாவது சமூகத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கலாம்.

அதை வெளிப்படுத்துவதும், எங்கள் உறுப்பினர்களை எந்த வகையிலும் இதுபோன்ற மோதலில் ஈடுபட வேண்டாம் என்பதும், மோதல் ஏற்பட்டால் பொலிஸாரும் ஆயுதப்படைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களுக்குள் இதுபோன்ற விடயங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...