tamilnig 12 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்

Share

குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்

இலங்கையில் வருடாந்தம் 250 – 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா,

2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரத்தப் புற்றுநோயானது சிறுவர்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை உண்பது பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம் என்றும், ஆனால் குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுபோன்ற குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வருடத்திற்கு 1,000 முதல் 1,200 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...