20230520 100215 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!

Share

யாழ்மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்!

மலையகம் 200. மலையக மக்களின் இருபதாவது ஆண்டை நோக்கி சர்வத வழிபாடுகளும் மலையக மக்களின் உரிமைகளும் வலியுறுத்தல்களும். மேற்படி அம்சத்தை முன்வைத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் அமைதியான முறையில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று.
இந்தப் போராட்டத்தினை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர என்பதை நினைவு கூர்ந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகளை ஏந்திய பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டனர்.
“மலையக மக்கள் சுதந்திரமாக வாழ காணி வழங்கு”
“மலையக மக்களை சிதைக்க வேண்டாம்”, “பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே” , மலையக மக்கள் சுதந்திரமாய் வாழ காணிக்கொடு” தோட்டா வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட வேண்டும்” , வியர்வை விதைத்த பூமி உழைப்பாளர்கள் உரிமையான பூமி”,  போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...