24 6631aece72108
சினிமாபொழுதுபோக்கு

தன்னை தானே செதுக்கியவன்.. நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

தன்னை தானே செதுக்கியவன்.. நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

மே 1 உழைப்பாளர்கள் தினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதே நாளில் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மற்றொரு விஷயம் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகர் அஜித் குமார் கடந்த 1971ஆம் ஆண்டு மோகினி – சுப்பிரமணியம் தம்பதிக்கு பிறந்தவர். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் அஜித் இன்றும் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உள்ளன. கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக ரூ. 105 கோடி சம்பளமாக பெற்றிருந்தார். இதை தொடர்ந்து நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பின் ரூ. 200 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என சமீபத்தில் தகவல் வெளிவந்தது.

நடிகர் அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீடு ஒன்று இருக்கிறது. அதே போல் துபாய்யிலும் இவருக்கு சொந்தமான சொகுசு வீடு இருக்கிறது. இதை சமீபத்தில் தான் அவர் வாங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

BMW 740 Li Car ரூ. 1.5 கோடி, Land Rover Discovery ரூ. 1.30 கோடி, Ferrari 458 Italia ரூ. 4 கோடி மதிப்புள்ள கார்களை பயன்படுத்தி வருகிறாராம். மேலும் BMW R 1250 GS Adventure ரூ. 22 லட்சம் மதிப்புள்ள மைக்கை தான் உலகளவில் சுற்று பயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வருகிறாராம்.

கடந்த ஆண்டு நடிகர் அஜித் மைக் பிசினஸ் ஒன்றை துவங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் அஜித்திற்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் அஜித் முதலீடு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடிக்கும் மேல் இருக்குமாம்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...