குரங்குகள் ஏற்றுமதி – அறிக்கை வெளியிட்டது சீனா!
குரங்குகள் ஏற்றுமதி – அறிக்கை வெளியிட்டது சீனா!.
இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்றும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
வன விலங்குகள் மற்றும் தாவர ஏற்றுமதி இறக்குமதியை கண்காணித்து நிர்வகிக்கும் முக்கிய அரச துறையான சீன தேசிய வன மற்றும் புற்தரை நிர்வாகமானது, அவ்வாறான எந்தவொரு கோரிக்கையையோ அல்லது விண்ணப்பங்களையோ எந்தப் பக்கத்திலிருந்தும் தாம் பெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளதாக சீன தூதரகம் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
#SriLankaNeews