இலங்கை
ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி!!


இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கடந்த ஜனவரி மாதத்தில் 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் வீதமும் 1.2 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
ஆடை ஏற்றுமதியின் ஊடாக கடந்த வருடத்தில் இந்த காலப்பகுதியில் 478.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது.
இந்த வருடத்தில் ஆடை ஏற்றுமதியின் ஊடாக, 388.9 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, ஆடை மற்றும் அதனுடன் சார்ந்த இறக்குமதியும் கடந்த ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
You must be logged in to post a comment Login