போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய், செல்லவுள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தல் சட்டத்தின் கீழ், 30 நாட்களுக்குள், ‘ஹரக் கடா’ என்ற நிழல் உலக தாதாவை இலங்கைக்கு அழைத்துவரும் நோக்கியேலே அதிகாரிகள் குழு அங்கு செல்கின்றது.
டுபாய் சர்வதேச பொலிஸ் பிரிவு, போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், வெளிவிவகார அமைச்சு, போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன ‘ஹரக்கடாவை’ இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன.
ஹரக் கட்டா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கையின் இன்டர்போல் கிளைக்கு அந்நாட்டின் சர்வதேச பொலிஸ் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ், டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், இதற்கு முன்னர் துபாய் சர்வதேச பொலிஸ் பிரிவின் அறிவித்தலுடன் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் மாகந்துரே மதுஷும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
#SriLankaNews
Leave a comment