எரிபொருள் கறுப்பு சந்தையை தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கைவிரித்துள்ளார்.
யாழில் ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான் தாம் எரிபொருள் வழங்குவோம் என அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ் மாவட்டடத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழில் ஐஓசி நிறுவனம் பொது மக்களுக்கு எரிபொருளை வழங்குவோம் என ஊடக சந்திப்பு நடத்தியதாக அறிகிறேன்.
அவர்கள் தமது எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை.
வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருள் வழங்க குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுக்குமானால் முறையான ஒரு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருளை வழங்கும் போது அருகில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெறக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும் நிலையில் கறுப்புச் சந்தையை கட்டுப்படுத்த முடியாதுபோகும்.
ஆகவே எரிபொருள் விநியோகத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் மட்டும் தனித்து செயற்படுத்தி விட முடியாத நிலையில் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் – என தெரிவித்தார்.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment