இரட்டைக் குடியுரிமை
அரசியல்இலங்கைசெய்திகள்

பத்து எம்.பிக்களுக்கு இரட்டைக் குடியுரிமை!

Share

இரட்டைக் குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்.பி. பதவியை வகிக்கின்றனர் என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சட்டமூலம் நிறைவேறினால் அந்த 10 பேரும் எம்.பி. பதவியை இழக்க நேரிடும் எனத் தெரியவருகின்றது.

21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள ‘இரட்டைக் குடியுரிமை தடை’ என்ற ஏற்பாட்டை நீக்கிக்கொள்வதற்கு இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்படி 10 பேரில் மலையக அரசியல்வாதி ஒருவரும் உள்ளடங்குகின்றார். எனினும், வீசா இன்றி இந்தியாவுக்குச் செல்வதற்கான ஓர் ஏற்பாட்டையே அவர் வைத்துள்ளார் எனவும், அது இரட்டைக் குடியுரிமை அல்ல எனவும் தெரியவருகின்றது.

எனவே, 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால்கூட அவரின் பதவிக்குச் சிக்கல் ஏற்படாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...