44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

Share

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி புதின் மீது எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ், வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அவரது மாளிகையிலேயே வைத்து அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரோவின் கைதை வரவேற்ற உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, “ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும்” எனப் புதினைக் குறிவைத்து மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “புதினைக் கைது செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கும் எனக்கும் எப்போதும் ஒரு சிறந்த உறவு இருந்து வருகிறது.”

ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது தனக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறிய அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 31,000 பேர் (பெரும்பாலும் ரஷ்ய வீரர்கள்) உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

போரினால் ரஷ்யப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக மீண்டும் உறுதியளித்தார்.

மதுரோவின் கைது மூலம் தனது பலத்தைக் காட்டிய அமெரிக்கா, அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவுடன் அதே அணுகுமுறையைக் கையாளாது என்பதை ட்ரம்பின் இந்தப் பதில் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், உக்ரைன் போரை நிறுத்துவதே தனது முதன்மை இலக்கு என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...