ஹட்டனில் அமைதியின்மை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மக்கள் கொதிப்பு! – ஹட்டனில் அமைதியின்மை

Share

ஹட்டனில் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் கொதிப்படைந்தனர். கடும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஹட்டனில் நேற்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது. மண்ணெண்ணெய் பெறுவதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசைகளில் அணிவகுத்து நின்றனர்.

பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மண்ணெண்ணெய் பெறுவதற்கு வரிசையில் நின்றவர்களுக்கு ஆரம்பத்தில் தலா மூன்று லீற்றர் வீதம் வழங்கப்பட்டது. வரிசை நீண்டதால் பின்னர் அது இரண்டு லீற்றராக மட்டுப்படுத்தப்பட்டது. மாலையானதும் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் வரிசையில் நின்றவர்கள் கடுப்பாகினர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் எரிபொருள் நிலையப் பணியாளர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“வேலையை இழந்துவிட்டே வரிசையில் நின்றோம். மண்ணெண்ணெய் இல்லாது எப்படிச் செல்வது? நாளையும் வரிசைக்கு வர வேண்டுமா” என்று மக்கள் சீற்றம் வெளியிட்டனர்.

கூப்பன் முறையை அறிமுகப்படுத்தியாவது, முறையாக மண்ணெண்ணெய் வழங்குமாறும் அவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...