அத்தியாவசிய திருத்தப் பணிகளின் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இன்று நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இன்றிரவு 10 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை, கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் குறைந்த அழுத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment