இலங்கைக்கு இம்மாத இறுதியில் பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய பிரதமரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதென இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்திய பிரதமர் மோடி பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருவதற்கும், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவும், அதன் பின்னர் ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மோடியின் இலங்கை விஜயம் இடம்பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், காணொளி ஊடாக அவர் பிக்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment