வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாளை வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை மற்றும் விசாகப்பட்டினம், கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு சாத்தியம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 75–85 கிலோமீற்றரில் இருந்து 95 கிலோமீற்றர் வரை இருக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.
Leave a comment