FB IMG 1765564773386
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை, இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு: 6 வருட சலுகை மீண்டும் ஆரம்பம்!

Share

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று (டிசம்பர் 12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டது.

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோ. வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடி.

இந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டில் காலாவதியாகியிருந்தது. அதன் பின்னர் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் முதன்முறையாக 2011ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டதுடன், 2016இல் புதுப்பிக்கப்பட்டு 2021இல் காலாவதியானது.

இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதன் மூலம், இரு நாடுகளிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொண்ட பிரஜைகளுக்குக் கிடைக்கும். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், குறித்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் 6 வருட காலப்பகுதிக்குள் எழுத்துமூல மற்றும் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் தமது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது.

இந்த வசதியானது இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்தப் புதிய ஒப்பந்தம் 5 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். ஒப்பந்தம் இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 60 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். நடைமுறைக்கு வந்ததும் இரு தரப்பினரும் அது குறித்து அறிவிப்பார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...