unnamed 1 2
செய்திகள்அரசியல்இலங்கை

இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரை: கோட்டாபய ராஜபக்ச!!

Share

இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் அடுத்த மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சசெயற்படுவதுடன், உப தலைவர்களாக இந்தியா, சிங்கப்பூர், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த வருடத்துக்கான தொனிப்பொருள்“ சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் தொற்று” என தெரிவித்த அவர், இந்த மாநாடானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது

இலங்கை கொரோனா தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி என்பவற்றின் பின்னணியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில், குறித்த இரண்டு அதிகாரிகளிடமும் விரிவான காரணங்களை முன்வைக்க இது ஒரு பயனுள்ள சந்தர்ப்பமாக
அமைந்தது என குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...