விமல் வீரவன்ச
செய்திகள்அரசியல்இலங்கை

நீதி வெல்லும்! – உண்மை சாகாது என்கிறார் விமல்

Share

“நான் அமைச்சரவையிலிருந்து நீதிக்காகவே குரல் கொடுத்தேன். நாட்டின் நலன் கருதி உண்மைகளைப் பகிரங்கமாக உரத்தபடியால் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பறித்துள்ளார். எனினும், நீதி வெல்லும்; உண்மை ஒருபோதும் சாகாது.”

-இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

நேற்று மாலை தனது வீட்டில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் உள்ளிட்ட எனது கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எதிரணிப் பக்கம் அமரமாட்டோம். அரச பக்கம் இருந்தே சுயாதீனமாகச் செயற்படுவோம். எனக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைத்தே தீரும்.

எனது அமைச்சுப் பதவி பறிபோக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே முழுக்காரணம். அதற்கான விளைவுகளை அரசியல் ரீதியில் அவர் விரைவில் சந்தித்தே தீருவார்.

நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் சென்றமைக்கும் பஸில் ராஜபக்ச பதில் சொல்லியே ஆகவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...