23 649119760c9ca
இந்தியா

றோ உளவின் புதிய தலைவராகும் ரவி சின்ஹா!!

Share

றோ உளவின் புதிய தலைவராகும் ரவி சின்ஹா!!

றோ உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்காவை இந்திய மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது இந்திய மத்திய கேபினட் செயலகத்தில் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்காவை பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்.

இந்தியாவின் முதன்மை உளவு அமைப்புகளில் ஒன்றான றோ அமைப்பானது உளவு மற்றும் கொள்கை வகுப்பு விவகாரங்களில் முதன்மையானதாக உள்ளது. வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பு ‘ரோ’ வின் தலைவராக உள்ள சமந்த்குமார் கோயல், இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, ‘றோ’ அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவி சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 2 ஆண்டுகளுக்கு அப்பதவியில் நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது. ரவி சின்கா தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்புச் செயலாளராக இருந்து வருகிறார். ரவி சின்கா 1988ஆம் ஆண்டின் சத்தீஷ்கார் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ‘ரோ’ அமைப்பில் 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கும் ரவி சின்ஹா, சில வெளிநாடுகளில், சீக்கிய பயங்கரவாதம் தலைதூக்கி வரும் வேளையிலும் மணிப்பூரில் இனவாத மோதல் வெடித்துள்ள இந்த சூழலில் ரவி சின்ஹா இப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.

தற்போது கேபினட் செயலகத்தில் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்ஹா, ஜம்மு – காஷ்மீர், வடகிழக்கு இந்தியா மற்றும் இடது சாரி தீவிரவாதம் உள்ளிட்ட சென்சிட்டிவ் ஆன விடயங்களை மிகவும் நுணுக்கமாக அறிந்தவர் என்று அறியப்படுகிறார். அதுமட்டும் இன்றி உளவுத்தகவல்களைச் சேகரிப்பதில் நவீன தொழில் நுட்பத்தையும் புகுத்தியவராகப் பார்க்கப்படுகிறார்.

றோ உளவு அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் சமந்த்குமார் கோயல், பாகிஸ்தானில் நடந்த சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு மேற்கொண்ட அமைதி நடவடிக்கை, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் எனப் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடித்தவராக அறியப்பட்டார். தற்போது புதிதாக றோ அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் ரவி சின்ஹாவுக்கும் பல்வேறு சவாலான பணிகள் இருந்தாலும் திறம்படக் கையாள்வார் என்பதில் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

6 3
இந்தியாஇலங்கைசெய்திகள்

தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொன்ற இளைஞன்

கேகாலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

5 3
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் இணையக்குற்றம்: முக்கிய செயற்பாட்டாளர்கள் இலங்கையில்

இந்தியாவின் பெங்களூரில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சுமார் 4 கோடி ரூபாய் இணைய வங்கி மோசடியில் இலங்கையும்...

25 68444cc754912
இந்தியாஉலகம்செய்திகள்

கனடாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள மார்க் கார்னி

கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதமர்...