curfew
இந்தியாசெய்திகள்

ஒமைக்ரோன் எதிரொலி: ஊரடங்கு அறிவிப்பு

Share

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் எதிர்வரும் 28 ஆம் திகதியில் இருந்து 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

கர்நாடக அரசின் இந்த உத்தரவு காரணமாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 3
இந்தியாசெய்திகள்

முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்: சௌந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில்,...

Untitled 41
இந்தியாசெய்திகள்

புதிய அரசுக்குக் கமல்ஹாசன் வாழ்த்து: 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட எடுத்த முடிவிற்கு வரவேற்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான...

Untitled 34
இந்தியாசெய்திகள்

முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு: ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் அரசுப் பதவி ரத்து

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD) ரிக்கி ராதன் பண்டிட்...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...