mano ganesan
செய்திகள்இலங்கை

ஆழமுடியாவிட்டால் சென்று விடுங்கள் – அரசுக்கு மனோ அறிவுரை!

Share

“ஆளமுடியாவிட்டால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாவிட்டால் போய் விடுங்கள். ஆள வேண்டியவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு, அறிவுறுத்துகின்றார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் இன்று பொருட்களின் விலை விண்ணைத்தொட்டுள்ளது. தேநீராக இருக்கலாம், பனிஸாக இருக்கலாம், சோற்று பார்சலாக இருக்கலாம் சாதாரண மக்களுக்குரிய அனைத்து பொருட்களின் விலைகளுமே அதிகரித்து வருகின்றன. பாதீடு மூலமாக சரியான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்கும் என்கின்றனர். நம்பவே முடியாது.

நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், ஆளமுடியவில்லை என்றால், போய்விடுங்கள். சரியானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.” – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...