died
செய்திகள்இந்தியா

வைத்தியசாலையில் தீ – 4 பச்சிளம் குழந்தைகள் சாவு

Share

இந்தியாவில் உள்ள வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ பரம்பலில் 4 பச்சிளம் குழந்தைகள் சாவடைந்துள்ளன.

இந்தியாவின் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அரச வைத்தியசாலையில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 பச்சிளம் குழந்தைகள் சாவடைந்துள்ளன..

வைத்தியசாலையில் சிறுவர்கள் சிகிச்சை பிரிவில் நேற்றிரவு குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த 36 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தீப்பரவல் காரணமாக சாவடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் சிவாராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களின் முன் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்ற கொடூர தீ விபத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...