106983766 1638471355360 gettyimages 1355744075 coronaomicronvariante
செய்திகள்உலகம்

மீண்டும் முடக்கம்?? – விஸ்வரூபமெடுக்கும் ஒமெக்ரோன் அலை!

Share

மிக வேகமாகப் பரவிவருகின்ற ஒமெக்ரோன் வைரஸ் ஐனவரி இரண்டாவது வாரத்தில் அதாவது அடுத்த வாரமளவில் உச்ச கட்டத் தொற்றை எட்டும் என்று நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2லட்சத்து 61ஆயிரத்து 481 (261,481) புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றன. இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஒமெக்ரோன் வைரஸ் தொற்று பாடசாலைகளை இயக்க முடியாத நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் இடையே இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 631 என்றும், திங்களன்று பாடசாலைகள் ஆரம்பித்த பிறகு கடந்த நான்கு நாட்களில் மட்டும் தொற்றுக் கண்டறியப்பட்ட மாணவர்களது எண்ணிக்கை 47 ஆயிரத்து 453 என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தொற்றுக்குள்ளான ஒன்பது ஆயிரம் வகுப்பறைகள் மூடப்பட்டிருக்கின்றன. தொற்று உறுதியான மாணவர்களும் தொடர்புடையோருமாக வகுப்புகளுக்கு வராதவர்களது எண்ணிக்கை நாளாந்தம்
பல ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. தொற்று மற்றும் தொற்றுடன் தொடர்புபட்ட தமது பிள்ளைகளை பாடசாலைகளில் இருந்து இடையில் வீட்டுக்கு அழைத்து அவர்களை வைரஸ்
பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பராமரிப்பதில் பெற்றோரும் பாதுகாவலர்களும் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் அணிகின்ற மிகு திறன் கொண்ட மாஸ்க்குகளை (surgical masks) இம்மாத இறுதிக்குள் விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் ஜீன் காஸ்ரோ இன்று தெரிவித்திருக்கிறார்.

FFP2 எனப்படுகின்ற அந்த வகை மாஸ்க்குகள் சாதாரணமானவற்றை விட அதிக பாதுகாப்பு அளிக்கக் கூடியவை என்று கருதப்படுகிறது. ஒமெக்ரோன் தொற்றைத் தவிர்ப்பதற்கு FFP2 மாஸ்க் சிறந்ததா என்பதை அறிவதற்காக அரசு நாட்டின் பொதுச் சுகாதார அதிகார சபையின் (Haut Conseil de santé publique) முடிவுக்காகக் காத்திருக்கிறது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

இதேவேளை, பாரிஸ் பிராந்தியத்தின் வில்ப்பனில் அமைந்துள்ள சிறைச்சாலையில் (La maison d’arrêt de Villepinte – Seine-Saint-Denis) தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 800 கைதிகளில் 200 பேரை ஒமெக்ரோன் வைரஸ் பெரும் கொத்தாகப் பீடித்திருக்கிறது.

179 கைதிகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களோடு தொடர்புடைய கைதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதிகளைப் பார்வையிடுவதற்காக வெளி ஆட்கள் செல்வதை சிறை நிர்வாகம் தடைசெய்துள்ளது.

பிரான்ஸின் சிறைகளில் இதுவரை கைதிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கலாக மொத்தம் 27 ஆயிரத்து 370 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...