HK Bank account
செய்திகள்அரசியல்இலங்கை

பொன்சேகா மருமகனின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் விடுவிப்பு!

Share

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகனின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து தனுன திலகரட்னவின் 7 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

கடந்த 2015ஆம் ஆண்டு தனுன திலகரத்ன இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கான தடை நீக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் பலமான ஒருவரின் தலையீட்டால் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...