india
இந்தியாசெய்திகள்

தேர் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபச் சாவு!

Share

இந்தியா – தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு தேர் பவனி இடம்பெற்றது.

குறித்த தேரின் மீது மின்சாரக் கம்பி உராய்ந்ததில் மின் ஒழுக்கு ஏற்பட்டு, அருகில் இருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயில் எரிந்துக்கொண்டிருந்த தேரை பலத்த போராட்டங்களின் பின்னர் கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.

மேலும் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தஞ்சாவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு இந்தியப் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 இலட்சம் ரூபாவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...