ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கமீது முட்டை தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இத்தாக்குதலின் பின்னணியில் முன்னிலை சோஷலிசக் கட்சியினர் இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் அதிகாரத்தை முன்னிலை சோஷலிசக் கட்சியினர் கைப்பற்றியுள்ளதால் ஜே.வி.பியினருக்கு இன்று பல்கலைக்கழகங்களுக்குகூட செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்புபட்டிருக்கமாட்டார் என்றே தான் நம்புவதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment