sarath
செய்திகள்அரசியல்இலங்கை

கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்! – பொன்சேகாவுக்கு வீரசேகர எச்சரிக்கை

Share

” கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய முற்பட வேண்டாம்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொன்சேகா எம்.பி. தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

” பொன்சேகாவின் குணம் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நல்லாட்சியின்போது அவருக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. ஆனால் இன்று பாதுகாப்பு அமைச்சு பதவி பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறார்.

யுத்தம் முடிவடைந்த பிறகு தேவையற்ற விதத்தில் ஆயுத கப்பலொன்றை கொண்டுவந்தார். அதனை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் திருப்பி அனுப்பியதாலேயே அவருடன் பொன்சேகா முரண்பட்டார். எனவே, கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...