6e07f2bbd17b1daeda0d611be0ad3961 M 1
செய்திகள்அரசியல்இலங்கை

சிலிண்டர் வெடிப்பு : பந்துல தலைமையில் கூடிய ஆலோசனை குழு!!

Share

தொடர்ந்து சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால்  நாட்டில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஒரு ஆலோசனை குழு நேற்று (03) கூடியது.

பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் இதுவரை 34 சிலிண்டர்கள் வெடித்து, மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  காலந்தாழ்த்த் செயற்பட்டால் இதனால் பாதிப்புகளை குறைக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சிலிண்டர்களில் பொருத்தப்படும் ஏனைய துணைகருவிகளாலும் இவ்வாறு விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கூட்ட இறுதியில் எவ்வித முடிகளும் எட்டப்படாமல் , இது தொடர்பான ஆய்வுகள் நிறைவடைய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, லிற்றோ, லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை  அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...