முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று (26) மாலை பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சென்ற மக்களை வழிபாடுகள் மேற்கொள்ளவிடாமல் இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தபோது, அங்கு சென்ற இராணுவத்தினர் இன்று பூசைகளை செய்ய முடியாது எனவும் வேறு ஒரு நாளில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தமையால் குழப்பை நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் மக்களின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.சந்திரறூபன், பூசை வழிபாடு செய்ய தடைவிதித்த இராணுவத்தினரிடம் நீங்கள் கூறுவது போன்று பூசை வழிபாடுகளை மாற்ற முடியாது எனத் தெரிவித்தனர்.
அத்துடன் பூசை செய்யக் கூடாது எனில் நீதிமன்ற தடை உத்தரவினை காண்பியுங்கள் என கோரியதோடு இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கி சம்பவ இடத்திற்கு அழைத்தனர்.
இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிஸார் மக்களை வழிபாட்டிற்கு அனுமதித்துள்ளதுடன் குறித்த ஆலய முன்றலில் சூழப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் விலகி சென்றுள்ளார்கள். அதற்குப் பின்னரே ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
#SrilankaNews
Leave a comment