ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது .
அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது.
ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டசெய்தியில்,
ஆப்கான் தொடர்பாக பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் நடைபெறவிருக்கும் இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளைச் சோ்ந்த முதுநிலை தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளகிறார்கள்.
இதை போன்ற பேச்சுவாா்த்தையை இந்தியாவும் கடந்த புதன்கிழமை நடத்தியது எனவும் அதில் இந்தியா உள்பட 8 நாடுகள் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தானும், சீனாவும் வர மறுத்துவிட்டன.
இந் சூழலில், ஆப்கான் தொடர்பாக பாகிஸ்தான் நடத்தும் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளவீர்களா என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்னிடம் ஊடகவியலாளர்கள் வினவினார்.
அதற்கு, ‘ஆப்கானின் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அந்த நாட்டுக்கு சா்வதேச நாடுகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் நடைபெறும் அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிப்பதாகவும் அத்தோடு பாகிஸ்தான் நடத்தும் பேச்சுவாா்த்தையை தாம் வரவேற்பதாகவும் அப் பேச்சுவாா்த்தையில் தாம் கலந்து கொள்ளவோமெனவும் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் விடையத்தில் சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment