usa 3
செய்திகள்உலகம்

பொதுவெளியில் அமெரிக்காவை கடிந்த சீனா!

Share

உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது என கூறி அமெரிக்காவை சீன அதிபர் ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார்.

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே  அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு நிலையும் மோசமாகியுள்ளது.

ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை மீட்டெடுக்கப்பட்ட 50-வது ஆண்டு நிறைவை குறிக்கும் மாநாட்டில் பேசிய சீன  ஜனாதிபதி ஜின்பிங் அமெரிக்காவை மறைமுகமாக சாடி உரையாற்றினார்.மாநாட்டில் அவர் உரையாற்றும்போது ஐ.நா. சபையின் அதிகாரத்தையும் நிலைப்பாட்டையும் நாம் உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும்.

சர்வதேச விதிகளை 193 ஐ.நா. உறுப்பு நாடுகளால் மட்டுமே உருவாக்க முடியும்.

தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் தீர்மானிக்க முடியாது.

சீன மக்கள் எப்போதும் ஐ.நாவின் அதிகாரத்தையும் புனிதத்தையும் நிலைநிறுத்தியுள்ளனர் என்றும், ஐ.நாவுடனான சீனாவின் ஒத்துழைப்பு கடந்த 50 ஆண்டுகளாக சீராக ஆழமடைந்துள்ளது’  எனக் குறிப்பிட்டார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....