ஸ்டாலின்
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

ஊடகத்துறையினருக்குத் தமிழக முதலமைச்சர் பாராட்டு!

Share

ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பல உயிர்களைச் சேகரித்துத் தந்த ஊடகத்துறையினருக்கு தனது பாராட்டுக்களைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரச பொதுமருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் இங்கு உள்ளது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், விபத்து நடந்த இடத்தில செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் நோயாளிகளைச் சுமந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தன. மேலும், உதவி செய்த ஊடகவியலாளர்களுக்குப் பாராட்டுக்களும் குவிந்து வந்தன.

இந்தநிலையில், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ருவிட்டரில், “சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு – நேரத்தின் அருமை உணர்ந்து – பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!” – என்று அவர் பதிவிட்டுள்ளார்.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...