rain 5
செய்திகள்இலங்கை

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Share

தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
face book
இலங்கை

முகநூலால் சீரழிந்த வாழ்க்கை!

இந்த வருடம், கதிர்காமம் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில்...

suicide
இலங்கை

தன்னைத்தானே சுட்டு கொண்ட காவல் அதிகாரி!

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால்...

jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...

ஹர்ச நாணயக்கார
இலங்கை

செம்மணி தொடர்பில் புதிய சர்ச்சை – அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட தகவல்கள்.

செம்மணி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட...