இந்த வருடம், கதிர்காமம் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேற்படி, விவகாரம் மத ரீதியான மோதல்களாக மாறிய சந்தர்ப்பத்தில் அனோஜன் தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சவுதி அரேபியாவின் கடுமையான இணையவழி குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ், மதத்தைப் புண்படுத்தியதாகக் கூறி அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் இலங்கை மதிப்பில் சுமார் 27 கோடி இலங்கை ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.