1 9
செய்திகள்அரசியல்இலங்கை

கப்ராலைப் பதவி விலகுமாறு கோரவில்லை! – கோட்டா தெரிவிப்பு

Share

“மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலைப் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்வதில் பலமான ஒரு சக்தியாக அவர் செயற்படுவார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு, அதிகாரிகள் பற்றி கலந்துரையாடவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், நிதிப் பிரச்சினைகள் மட்டுமே கலந்துரையாடப்பட்டன.

இது போன்ற பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளராமல், நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அவரின் அனைத்து முக்கிய பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு, நான் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கின்றேன்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...