இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 12.25 மணிக்கு இந்த பசளைத் தொகுதி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL – 1156 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தது.
இந்தத் திரவப் பசளை, அம்பாறை, மட்டக்களப், திருகோணமலை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு, மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து, இலங்கையால் 31 லட்சம் லீற்றர் திரவ நைட்ரஜன் பசளை கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 5 லட்சம் லீற்றர் பசளை, இந்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளது.
குறித்த பசளையானது, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற உயர் ரக பசளையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment