செய்திகள்
‘சமூக நீதிப் போராளி அய்யா இரத்தினசாமி’ – நினைவுப்பகிர்வு நிகழ்வு


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்களின் தந்தை ‘சமூக நீதிப் போராளி அய்யா இரத்தினசாமி’ அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்வு நேற்று மாலை தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன், நாகை பாரளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டு நினைவுப்பேருரை நிகழ்த்தினார்.