24
செய்திகள்இலங்கை

அனைத்து வீடுகளுக்கும் ஆயுள்வேத மருந்து!

Share

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுள்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தையொட்டி கொரோனாத் தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு சகல வீடுகளுக்கும் உள்ளூர் மருந்துப்பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என  அவர் கூறியுள்ளார்.

இம் மருந்துப் பெட்டியில் ஆயுள்வேத மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் நோய் தடுப்பு பானம் மற்றும் மூலிகைப்பொடி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மருந்துகள் உள்ளடங்கிய பெட்டியானது முதலில் நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து விநியோகிக்கப்பவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...