பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்?
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பலர் தொற்றுக்குள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்துல குணவர்த்தனவின் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் தன்னுடன் தொடர்புகளைப் பேணியோர் சுயதனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
அதேநேரம் நேற்று (27) நடந்த தேசிய கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்த்தன பங்கேற்றிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் அமைச்சருடன் தொடர்புகளைப் பேணிய முதல்நிலைத் தொடர்பாளர்களாக மாறியுள்ளனர். கந்த நிலையிலையிலேயே மேற்படி அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a comment