gotta
செய்திகள்இலங்கை

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

Share

நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும். இவ்வாறு தனது உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய ஒரே வழி தடுப்பூசி ஏற்றிக்கொள்வதாகும்.
தொற்றின் ஆரம்பகட்டத்தில் நாட்டை முடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த முடக்கம் மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும் அடிக்கடி நாடு முடக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிக சரிந்து உள்ளது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையிலும், அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.

நாட்டை மீண்டும் முடக்குவதால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மீண்டும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும், நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் செய்கின்றபோதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்கள் பொறுப்பில் இருக்கின்றது. இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்ல. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்படும் அனைத்துத்துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டும். இந்த இக்கட்டான – முக்கியமான தருணத்தில், நாட்டின் அனைத்துத் தரப்பினரும், இந்தத் நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.

ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...