IMG 20210813 WA0046
செய்திகள்இலங்கை

அனைத்து மருத்துவமனைகளுக்கும் புதிய அறிவிப்பு

Share

அனைத்து மருத்துவமனைகளுக்கும் புதிய அறிவிப்பு

அனைத்து அரச மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவசர நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான நடவடிக்கைகளில் தலையிடாமல் கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம் ஒதுக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைகின்ற நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன்மூலம் பிரதான வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...