உலகநாயகன் கமலஹாசன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் என அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க, உலகநாயகன் தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கமலுக்கு பதிலாக அவரது மகள் ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனக் கூறப்பட்டது. இதேவேளை, நடிகர்கள் சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன், நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், வெகு விரைவில் அனைவருடனும் கமல்ஹாசன் பேசுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் கமலஹாசன் வீடியோ கான்பரென்சிங் மூலம் ,பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அதனையே ஸ்ருதி தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
#BigbossSeason5
Leave a comment