ஜெயில் பார்க்க ஆசையா?

Jail

jail

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஜெயில்’ திரைப்படம் மார்கழி 9ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்படம் சில பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ‘ஜெயில்’ வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் பெற்றது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மார்கழி 9ஆம் திகதி ஜெயில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையை களமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜி.வி பிரகாஷுடன் அபர்நதி , ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுமென திரைபடக்குழு தெரிவித்துள்ளது.

#india

Exit mobile version