உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு அவரது பிறந்த தினமான நவம்பர் 7 ஆம் திகதியன்று மிகப்பெரும் விருந்து காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகநாயகன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது விக்ரம் திரைப்படம். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விக்ரம் படத்தின் கிலிம்பஸ் வீடியோ ஒன்று வெளியாகவுள்ளது. எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி உலகநாயகனின் பிறந்ததினம் என்பதால், இதனை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்படவுள்ளது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராமன் மற்றும் நரேன் உள்பட பலர் நடிப்பில் உருவாகிவரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment