கேரட் முட்டை பொறியல்

Carrot Egg

கேரட் முட்டை பொறியல் எப்படித் தயார் செய்வது என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

கேரட் – 1
சின்ன வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – சிறிது
முட்டை – 2
உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை
பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு, கேரட்டை நன்றாக துருவி கொள்ளவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் தாளிப்பதற்குத் தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு தாளித்துக்கொள்ளுங்கள்.

தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

முட்டை மற்றும் கேரட் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும்.

இப்போது சுவையான கேரட் – முட்டை பொரியல் ரெடி

#HealthyRecipes,

Exit mobile version