ஜனாதிபதிக்கும், அரச பங்காளிக்கட்சிகள் மற்றும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய...
தமது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அப்பதவியிலிருந்து விலக்கிவிட்டு புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் தனது உத்தேச திட்டத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார் எனத்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு...
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்...
பெற்றோல், டீசல் வரி குறைப்பு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். பெற்றோல், டீசல் மீதான ‘வட்’ வரியைக் குறைக்குமாறு, மாநில அரசுகளைப் பிரதமர் மோடி...
ஆப்கானிஸ்தானில் மாணவிகள் ஹிஜாப் அணியாததால் தலீபான்கள் பள்ளியை மூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். பள்ளிகளில் மாணவிகளுக்குக் கடுமையான உடைக்...
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். வேலணை பிரதேச சபையில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து...
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்குப் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடிப்...
“எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். பிரதமரைப் பதவி விலகக் கோரும்...
நாடு முழுவதும் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும் என இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் பல வங்கிகளின்...
நாடு முழுவதும் வழமைபோன்று இன்று பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ரயில்வே மற்றும்...
அரசுக்கு எதிராக இன்று பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் நாடளாவிய ரீதியில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் உட்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஒன்றிணைந்த...
ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பல உயிர்களைச் சேகரித்துத் தந்த ஊடகத்துறையினருக்கு தனது பாராட்டுக்களைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரச பொதுமருத்துவமனை உள்ளது. இந்த...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது முககவசம் அணிவது, சமூக இடைவெளியைப் கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பங்குகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த்...
“என்னைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு அவர் என்னிடம் கூறவும் மாட்டார் என்று நம்புகின்றேன்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இன்று அலரி மாளிகையில் ஸ்ரீலங்கா பொதுஜன...
யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது, யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் ஒரு வாரத்துக்குள் பதவி விலகக் கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண...
நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அடையாள வேலைநிறுத்தம் நாளை (28) நள்ளிரவு...
ரம்புக்கனை போராட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட...