shan 01 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை!

Share

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்குப் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தனக்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் எம்.பி. தெரிவிக்கையில்,

“14 நாட்களுக்கு வீதியை மறித்தோ பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

இதுதான் நாட்டின் இன்றைய அராஜகமான நிலை. ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும்போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றிருக்கின்றார்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா? என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.

களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார்.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. அவ்வாறிருக்கையில், களவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களைக் கட்டுப்படுத்த அரசு முனையும்போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாகப் போராட முனைவார்கள்.

நான் இன்று வரை போராட்டங்களைச் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், இந்தத் தடை உத்தரவு கிடைத்ததற்குப் பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...